டில்லி,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்.பி. மைத்ரேயன் திடீரென குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார்.

இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதல் காரணமாக, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திமுக உள்பட எதிர்க்கட்சியினர் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன், மைத்ரேயன் எம்.பி. திடீரென சந்தித்து பேசினார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசு துணைத்தலைவருடன் ஆலோசித்ததாக மைத்ரேயன் எம்.பி கூறி உள்ளார்.