சென்னை:

சமுதாய நன்மைக்காக ராஜினாமா செய்ய  என்ன வாழப்பாடியாரா? அதிமுக எம்எல்ஏக்களை கிண்டல் செய்யும் அமைச்சர் செங்கோட்டையன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக, அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் (அதிமுக) கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுகவின் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என அனைவருமே தங்களது பதவியை துறப்போம் என்று என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல ஏதாவது ஒரு கோரிக்கைக்காக ராஜினாமா அறிவிப்பு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், “எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பதவியை ராஜினாமா செய்யப்போவதாக எம்எல்ஏக்கள் கூறுவதெல்லாம் சும்மாதான். வாழப்பாடியாரை (வாழப்பாடி ராமமூர்த்தி) தவிர இதுவரை யாரும் தங்கள் கோரிக்கைக்காக பதவியை ராஜினாமா செய்ததில்லை” என்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை கிண்டலடித்துள்ளார்.

காவிரி பிரச்சினைக்காக 1992ல் தனது மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.