வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது – அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

Must read

புதுடெல்லி:

வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து மாநிலங்களவையில் நடைபெற்ற மசோதா மீதான விவாதத்தின் போது, வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், “அகில இந்திய அளவில் விவசாயத்துறையை ஒழுங்குபடுத்த ஆணையம் அமைக்க வேண்டும். விவசாயத்துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகம் ஈடுபடுவதால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. ஒப்பந்தம் அளவிலான விவசாயம் உலகளவில் தோல்வியடைந்த முறை. இந்த மசோதாவால் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும்” என்று எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

More articles

Latest article