சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மோசமான பின்னடைவை சந்தித்துள்ள அதிமுக, 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கும் தகவல்கள் வந்துகொணடுள்ளன.

காலை 10 மணி நிலவரப்படி, மக்களவைத் தொகுதி நிலவரத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஆனால், சட்டமன்ற இடைத்தேர்தல்களில், மொத்தம் 10 தொகுதிகள் வரை முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடக்கம் முதலே, நாடாளுமன்ற தேர்தலைப் பற்றி அதிமுக தலைமை பெரிதாக கவலைப்படவில்லை என்றும், ஆட்சியைக் காக்கும் வகையில், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலேயே மிகவும் கவனத்துடன் செயல்பட்டது எனவும் கூறப்பட்டது.

அந்தக் கூற்று உண்மையாகும் வகையில் தற்போது தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வந்துகொண்டுள்ளன.

[youtube-feed feed=1]