சென்னை:

நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் பூதாகாரமாக எழுந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதிமுக தலைவர்களிடையே நடைபெறும் போட்டி… போஸ்டர் யுத்தமாக தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.

பல இடங்களில் எடப்பாடிக்கு ஆதரவாகவும், சில இடங்களில் ஓபிஎஸ்-சுக்கு ஆதரகவும் வேறு சில இடங்களில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழலில் இன்று  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் அதிமுகவில் நிலவும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரட்டை தலைமைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா போர்க்கொடி தூக்கி பிள்ளையார் சுழி போட்ட நிலையில், தொடர்ந்து பல தரப்பினரும் பல்வேறு தங்களது கருத்துக்களை வலியுறுத்தி வருகின்றனர். ராஜன் செல்லப்பா ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சிலர் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் நிலையில், இது துணை முதல்வருக்கு எதிரான கருத்து என்பது பொதுவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், என்பதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் அச்சிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.

எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை என்ற பொறுப்பை தக்க வைக்க காய் நகர்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல எம்எல்ஏக்களை எடப்பாடி சந்தித்து பேசிய தாகவும், இரு மணி அமைச்சர்களும் டில்லி சென்று அமித்ஷாவின் ஆதரவை கோரியகதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த பரபரப்பான சூழலில்தான்  இன்று  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனால், இன்று காலை சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் திடீரென அதிமுகவினர் களின் போஸ்டர்கள் காணப்பட்டன. அதிமுக தலைமை கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டையிலும் பல போஸ்டர்கள் காணப்பட்டன. அதில் “பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அதிமுக நிர்வாகிகள் இடையே  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, சில இடங்கிளில் அதிமுக பொதுச்செயலாளராக கே.ஏ.செங்கோட்டையனை தேர்வு செய்ய கழக தொண்டர்கள் விரும்புவதாக போஸ்டர்கள் ஒட்டப்பபட்டுள்ளது.

அதிமுகவில் பதவி சண்டைக்காக போஸ்டர் யுத்தகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது விரைவில் தெரிய வரும்…