சென்னை:
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக அம்மா மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘‘அதிமுக உறுப்பினர்கள் பெருவாரியானோர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, கழக சட்ட விதிகள் விதி 19 பிரிவு-7ன் படி அஇஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 12.9.17ம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதணன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழ உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிமுக பொறுப்பாளர்களின் ஒப்பதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது ’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.