சென்னை

மிழக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

தமிழக சட்டப்பேர்வை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.  இந்த கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்து அதிமுக ஆட்சியை இழந்தது.   இந்நிலையில் தமிழ்கத்தில் ஊராட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து செய்தியாளர்களிடம், “”இந்த வருட சுதந்திர தினத்தை பாஜக சார்பில் மகிழ்ச்சி திருவிழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.  அன்று தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் 75 இடங்களுக்குச் சென்று தியாகிகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.   முதலாம் சுதந்திரப் போர் நடந்த வேலூர் கோட்டையில் மரியாதை செலுத்த உள்ளோம்

அதிமுக – பாஜக கூட்டணி கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது அமைந்து பிறகு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. அது வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களையும் எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிமுகவுடன் பேச்சு நடத்துவோம்.  இதுவரை தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் அதுபற்றி பேசுவது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றது.” எனத் தெரிவித்துள்ளார்.