தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3600 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 950 இடங்கள் உள்ளன. மேலும் இந்தாண்டு கூடுதலாக கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்தாண்டு 5600 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
அதேபோல், ஏற்கனவே ஆயிரத்து 758 முதுகலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தாண்டு கூடுதலாக 161 இடங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முதுகலை பாடப்பிரிவில் மொத்தம் 1919 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குகான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், தமிழத்தில் மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரிகள் அனைத்தும் இன்னும் இரு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்போது கல்லூரி ஒன்றுக்கு 150 மாணவர்கள் வீதம், 11 கல்லூரிகளுக்கும் சேர்த்து கூடுதலா 1650 கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.