பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதி திருப்தி அளிக்காததால் படம் கைவிடப்பட்டது.

தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கப்பட்டாலும், இடைவெளி இல்லாமல் படுவேகமாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 8ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.