சென்னை:  கள்ளக்காதல் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அன்னபூரணி என்ற பெண், தற்போது  “ஆதிபராசக்தி அம்மா” என்ற பெயருடன் ஆன்மிகவாதியாக வலம் வருகிறார். அவர் ஆதிபராசக்தியின் அருள்வாக்கு என்ற பெயரில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு காவல்துறை தடை விதித்துள்ளதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியவர் அன்னபூரணி. மற்றொரு பெண்ணின் கணவருடன் சட்டவிரோதமாக அன்னபூரணி வாழ்ந்து வந்ததாக அவரது மனைவி புகாரின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இவர் தற்போது ஆன்மிக ஈடுபாட்டில் இறங்கி, சாமியாரினியாக வலம் வருகிறார். இவர், தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிகொள்வதாகவும் கூறப்படுகிறது.

இவர், செங்கல்பட்டில் ஒரு திருமண மண்டபத்தில் அருள்வாக்கு கூற ஏற்பாடு செய்திருப்பது தொடர்பான நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,  உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி 1ஆம் தேதி அருள்வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்,   திருமண மண்டப உரிமையாளரை எச்சரித்து அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என எச்சரித்துள்ளதாகவும்,  அதையும் மீறி அனுமதித்தால் உரிமையாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் எனமிரட்டல் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன்,  அன்னபூரணி குறித்த வீடியோக்களை நான்பார்த்த போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. இருந்தாலும், மற்றொருபுறம்,  மக்கள் இப்படி போலி சாமியார்களை கண்டு ஏமாந்து போகிறார்களே என கஷ்டமாகவும்  இருக்கிறது. அன்னபூரணியின் கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கை  அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் இது போல் சாமி என சொல்லிக் கொண்டு அவர் காலில் விழுவது தவறான மற்றும்  முட்டாள்தனனமா செயல்.

நான் கடவுளின் அவதாரம் என சொல்லிக் கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக் கூடாது. சிந்தித்து கண் விழித்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.