சென்னை’

காதல் திருமணம் செய்த நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என ஆதி அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகுக்கு சாமி டைரக்டு செய்த ‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆதி. பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் ஆவார். ‘ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்’ ஆகிய படங்களில் ஆதி நடித்து இருக்கிறார்.

‘டார்லிங்’  என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இருவரும் பிரிய இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின.

நடிகர் ஆதி இது குறித்து,

” நாங்கள் காதலர்களாக மாறுவதற்கு முன்பும், தற்போது கணவன் – மனைவியான பிறகும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் இதயங்களில் ஒன்றுபட்டுள்ளோம்.

அப்படி உள்ளநிலையில், இதுபோன்ற வதந்திகள் பரவியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

எனக்கு மிகுந்த வேதனையையும் கொடுத்தது. சில யூடியூப் சேனல்கள் சில ஆதாயத்திற்காக தவறான செய்திகளை பரப்புகின்றன’

என்று தெரிவித்துள்ளார்.