மக்கள் தொகை பட்டியலில் ஆதார் எண், பான் எண் அனைத்தும் இணைப்பு

Must read

டில்லி

டுத்த வருடம் உருவாக்க உள்ள மக்கள் தொகைப்பட்டியலில் ஆதார் மொபைல். பான் எண்கள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல விவரங்கள் இணைக்கப்பட உள்ளன.

மக்கள் தொகை பட்டியல் முதல் முதலாக கடந்த 2011 ஆம் வருடம் உருவாக்கப்பட்டது.   கடந்த 2015 ஆம் வருடம் அது மேம்படுத்தப்பட்டது.   அப்போது அந்தப் பட்டியலில் ஆதார், மொபைல் எண் மற்றும் ரேஷன் அட்டை விவரம் சேர்க்கப்பட்டது.   வரும் 2011 ஆம் வருடம் மேலும் பல விவரங்கள் இணைக்கப்பட்டு மக்கள் தொகை பட்டியல் உருவாக்கப்பட உள்ளது.    அதற்கான கணக்கெடுப்பு வரு 2010 ஆம் வருடம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் தொகையில் வழக்கமான குடியிருப்போர் குறித்த விவரங்கள் இடம் பெற உள்ளது.  வழக்கமான குடியிருப்போர் என்பவர் ஒரு பகுதியில் ஆறு மாதங்களுக்கு மேல் வசிப்பவர் மற்றும் மேலும் ஆறு மாதங்கள் அதே பகுதியில் வசிக்க உள்ளவர் ஆவார்.   இந்த பட்டியலில் பல முக்கிய சொந்த விவரங்கள் இணைக்கப்பட உள்ளதால் இவற்றைக் கையாள கடவுச் சொல் (பாஸ்வர்ட்) அளிக்கப்பட உள்ளது.

இந்த பட்டியலில் ஆதார், பான், மொபைல் எண்கள், ரேஷன் கார்ட் விவரம், பாஸ்போர்ட் எண்,  வாக்காளர் அட்டை எண் உள்ளிட்ட பல விவரங்கள் சேர்க்கப்பட உள்ளன.   இதில் ஆதார் எண் இணைப்பு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததாகும்.   ஒவ்வொருவருக்கும் அவருடைய மொபைல் எண் அடிப்படையில் ஓர் தனி எண் உருவாக்கப்படும்.   அந்த எண்ணுக்கு பாஸ்வர்ட் அனுப்பப்படும்.   அதன் மூலம் மக்கள் தங்கள் விவரங்களை தாங்களே இணையத்தில் பதிவு செய்ய முடியும்

பாஸ்போர்ட் விதிகளின்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.    ஆனால் தற்போது தேசியக் குடியுரிமைப் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் பலருடைய பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.   எனவே இந்த பட்டியல் தயாராகும் முன்பு இது குறித்து அரசு ஒரு முடிவுக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article