சேலம்
பயணிகள் கூட்ட நிரிசலை முன்னிட்டு 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

தெர்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரி,
பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு 8 ரயில்களில் தற்காலிக பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கோவை-மன்னார்குடி (வண்டி எண்.16616) மற்றும் மன்னார்குடி-கோவை (16615) செம்மொழி தினசரி எக்ஸ்பிரசில் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை இந்த ரயில்களில் தற்காலிகமாக பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
* கோவை-திருப்பதி (22616) மற்றும் திருப்பதி-கோவை (22615) வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரசில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை தற்காலிகமாக குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்படும்.
* கோவை-நாகர்கோவில் (22668) தினசரி எக்ஸ்பிரசில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை (22667) தினசரி எக்ஸ்பிரசில் வருகிற 12-ந்தேதி முதல் ஆகஸ்ட் 2-ந்தேதி வரை தற்காலிகமாக பெட்டி இணைக்கப்படும்.
* கோவை-ராமேஸ்வரம் (16618) வாராந்திர எக்ஸ்பிரசில் வருகிற 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையும், ராமேஸ்வரம்-கோவை (16617) வாராந்திர எக்ஸ்பிரசில் வருகிற 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தற்காலிகமாக பெட்டிகள் இணைக்கப்படும்.
என அறிவித்துள்ளார்.