சென்னை:
தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு ஏற்கனவே 6 தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது மேலும் 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க இன்றுஇரவு முதல் 144 தடை உத்தரவும், நாளை முதல் மாவட்ட எல்லைகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 7 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே ஆய்வங்கள் உள்ள நிலையில், 6 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் கொரோனா ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேலும் 2 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி,
1) சிஎம்சி மருத்துவக்கல்லுரி, வேலூர் (Dept. of Clinical Virology, CMC, Vellore)
2) அப்போலோ மருத்துவமனையில்,டிபார்ட்மென்ட் ஆப் லாபரட்டரி சரிவீஸ்ஸ், சென்னை (Department of Laboratory Services, Apollo Hospitals Enterprise Ltd, Chennai)
அரசு கொரோனா பரிசோதனை கூடங்கள்… விவரம்..
தனியார் கொரோனா சோதனைக்கூடங்கள் விவரம்…