கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  சந்தைகளில் 50 சதவிகிதம் கடைகள் மட்டுமே இயங்கலாம். மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தையில் 50 சதவிகிதம் கடைகள் சுழற்சி முறையில் இயங்கலாம். வாரச்சந்தைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பூங்காக்கள், அனைத்து வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.