சென்னை:
போக்குவரத்து விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்ன காவல்துறை தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையிலான அபராத தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை சார்பில், வரும் 28ஆம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதலே வசூல் செய்யப்பட உள்ளது.
புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் அபராதம் செலுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்தபட்சம் ரூ.1000-ல் இருந்து ரூ.10,000 வரை அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel