சென்னை:
ன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம், ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் தமிழினத்திற்குக் கிடைத்த பெருமை என்றும் கூறியுள்ளார்.