சேலம்:
சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சேலம் எஃகு ஆலை கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் கடந்த 22-ஆம் தேதி துவங்கப்பட்டது.
இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
இதுகுறித்து சேலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி, சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களைச் சேர்க்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.