மேற்குவங்க மாநிலத்தின் முன்னனி அரசியல் கட்சியான திரினாமுல் காங்கிரஸ், தனது கட்சியின் சார்பில் 42 தொகுதிகளுக்கும் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளது.

இதில் பிரபல டாலிவுட் நடிகர் மிமி சக்கரவர்த்தி மற்றும் நஸ்ரட் ஜஹான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பட்டியலின் படி மிமி சக்கரவர்த்தி ஜாதவ்பூர் தொகுதியிலும், நஸ்ரட் ஜஹான் பாஷிரட் தொகுதியிலும், ஷதாப்தி ராய் மற்றும் தேவ் ஆகியோர் பீர்பம் மற்றும் கடல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மூத்த நடிகரான மூன்மூன் சென், பாஜக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை எதிர்த்து களமறிக்கப்படுகிறார்.

மிமி சக்ரவர்த்தி
ஜல்பைகுரியில் பிறந்த மிமி சக்ரவர்த்தி, பாபி பாரி ஜா என்கிற படத்தின் மூலம் 2012ம் ஆண்டு டாலிவுட் நடிகராக அறிமுகமானார். தனது சிறுவயது காலத்தை அருணாச்சல் பிரதேசத்தில் செலவு செய்த அவர், ஆங்கிலத்தில் இலக்கியம் பயின்றுள்ளார். 2008ம் ஆண்டு டிவி தொடர்களின் மூலம் அவர் அறிமுகம் பெற்றிருந்தாலும், அதன் பிறகு மிகப்பெரிய இடைவேளி எடுத்துக்கொண்டார்.

நஸ்ரட் ஜஹான்
பெங்காலி இஸ்லாமிய குடும்பத்தில் வாழ்ந்த நஸ்ரட் ஜஹான், லேடி குயின் ஆப் தி மிஷன்ஸ் பள்ளியில் பயின்று, பவானிபூர் கல்லூரியில் தனது மேற்படிப்பை முடித்தவர். ராஜ் சக்ரவர்த்தியின் சத்ரு படத்தில் அறிமுகமான இவர், மேலும் சில படங்களில் நடத்துள்ளார். தற்போது செவன் என்கிற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

மூன்மூன் சென்
மூன்மூன் சென் பெங்காலி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்த அனுபவம் கொண்ட ஒரு மூத்த நடிகர். அவர் கடைசியாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அவை பெங்காலி திரைப்படத்துறை போல வெற்றிகரமாக அமையவில்லை. அவர் 60 திரைப்படங்கள் மற்றும் 40 டிவி தொடர்களில் நடித்துள்ளார். பெங்காலி நடிகை சுசித்ரா சென் மற்றும் டிபனாத் சென் ஆகியோருக்குப் பிறந்த இவர், லோரெட்டோ கான்வென்ட், டார்ஜீலிங் மற்றும் லோரெட்டோ ஹவுஸ், கல்கத்தாவில் படித்தார். பின்னர் இங்கிலாந்திலுள்ள ஒரு பள்ளியிலும் அதன்பின்னர் திரும்பிவந்து லோரெட்டோ கல்லூரி, கல்கத்தாவில் பட்டப்படிப்பையும் படித்தார். திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர், இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்து வெற்றிக் கண்டார்.

தேவ் அதிகாரி
மிகச்சிறந்த பெங்காலி நடிகரான இவர், நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அக்னிஷாபத் என்கிற படத்தின் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகமான அவர், அதன் பிறகு நிறைய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் இடதுசாரி தலைவர் சந்தோஷ் ரானாவை தோற்கடித்து, நாடாளுமன்ற அவைக்குள் அடியெடுத்து வைத்தார்.