டெல்லி: அதானி ஒரு துரோகி, பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர், அவருக்கு சீனர்களுடன் நல்ல உறவு உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி நிறுவனத்தின்மீது அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் உண்மைக்கு புறம்பாக பங்குச்சந்தையில் மோசடி செய்து லாபம் பார்த்தது என்றும் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது என்றும் அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டி உள்ளது, அதானி, பிரதமர் மோடியின் நண்பர் என்பதால், இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதானி நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது/

இதனை அடுத்து அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர் இருப்பதாக அதானி கூறி உள்ள நிலையில் அந்த வழக்கை எதிர்கொள்ள தங்கள் தயார் என்றும் அமெரிக்க நீதிமன்றத்தில் உங்கள் வழக்கை பதிவு செய்யுங்கள் என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில்,  பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமியும்,  அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், அதானி குழுமத்திற்கு எதிராக கயிறு இறகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக் கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதையடுத்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சுப்பிரமணியசாமி, அதானி ஒரு துரோகி, பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என கடுமையாக சாடியிருப்பதுடன், அவருக்கு சீனர்களுடன் நல்ல உறவு உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.