கமதாபாத்

ங்களைக் குறித்து தவறான செய்தி பதிந்ததாக தி ஒயர் ஊடகம் மீது பதிந்த வழக்குகளை அதானி குழுமம் திரும்ப பெற உள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் அதானி குழுமத்தைப் பற்றி செய்தி ஊடகமான தி ஒயர் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதை முன்னாள் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிகை ஆசிரியர் பரஞ்சோய் குப்தா எழுதி இருந்தார். இந்த செய்தி முதலில் 2017 ஆம் வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பதியப்பட்டு அதன் பிறகு நீக்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் மாதம் அந்தப் பதிவை தி ஒயர் வெளியிட்டது.

அந்த செய்தியில் மத்திய அரசு சிறப்பு ஏற்றுமதி பகுதி விதிகளை மாற்றியதால் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 500 கோடி ஆயத்தீர்வை செலுத்த தேவை இல்லாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தீர்வையை செலுத்தாமலே அதானி நிறுவனம் திரும்ப பெற விண்ணப்பித்திருந்ததாகவும் அந்த செய்தியில் காணப்பட்டது.

அதை ஒட்டி தி ஒயர் ஊடகத்தின் மீது அதானி குழுமம் பொய்யான செய்தியை பிரசுரித்து தங்கள் நற்பெயரை கெடுத்ததாக கூறி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது. அதை ஒட்டி அகமதாபாத் நீதிமன்றம் தி ஒயர் ஊடகத்துக்கு நோட்டிஸ் அனுப்பியது. அதன் பிறகு அதே ஊடகம் அதானி குழுமத்தை குறித்து மற்றொரு செய்தி வெளியிட்டது. அதற்காக அதானி குழுமம் மற்றொரு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் அதானி குழுமம்  தி ஒயர் ஊடகத்தின் மீது தொடர்ந்துள்ள அனைத்து மானநஷ்ட வழக்குகளையும் திரும்ப பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தி ஒயர் ஊடகத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் விரைவில் அறிவிப்பு வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி தமது ரிலையன்ஸ் நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை மீது தொடுத்திருந்த ரூ.5000 கோடி நஷ்ட ஈடு வழக்கை திரும்ப பெறுவதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.