சென்னை: போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் சட்டம் மூலம் இழந்த ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை  மீட்ட பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, தனது நிலத்தை மீட்டுக்கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையைமுதலமைச்சர் முகஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து,  பத்திரப்பதிவு துறையில் புதிய நடை முறையை அறிமுகம் செய்து வைத்தார் .

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  போலி பத்திரப் பதிவை சார்பதிவாளர்களே ரத்து செய்யும் வகையிலான புதிய நடைமுறையை தொடங்கி வைத்த முதலமைச்சர், போலி பத்திரப்பதிவால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கு நிலம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

போலி பத்திரப்பதிவு மூலம் தனது நிலத்தை இழந்த பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ புதிய சட்டத்தால் தனது நிலத்தை பெற்றுள்ளார். அதன்படி ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் மூலம் மீட்டு வாணிஸ்ரீயிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். நிலத்தை மீட்டு தந்த முதலமைச்சருக்கு வாணிஸ்ரீ நன்றி தெரிவித்தார்.