மதுரை,
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடைபெற்றுள்ள பரபரப்பான இந்த சூழ்நிலையில், நடிகை தமன்னா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
மேலும், கோவிலின் மேற்கூரை மற்றும் துண்களும் வெப்பம் காரணமாக பாதிப்புக்குள்ளாகி கீறல் விழுந்தும், சில இடங்களில் பெயர்ந்து விழுந்தும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள இந்துக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையிலும் கோவிலில் வழக்கமான பூஜை, புனஸ்காரப் பணிகள் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து வருகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.
தற்போது மதுரை நடைபெற்று வரும், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் கண்ணே கலைமானே படப்பிடிப்பில் நடிகை தமன்னா கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்காக அவர் மதுரையில் முகாமிட்டு உள்ளார்.
இன்று காலை திடீரென நடிகை தமன்னா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அங்கு கூடினர். போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்.