நடிகை சவுஜன்யா தற்கொலை செய்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை….!

Must read

குடகு மாவட்டத்தை சேர்ந்த சவுஜன்யா என்ற சவி மாரப்பா (வயது 25) கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனது மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாகவும், காதலன் விவேக் மீது சந்தேகம் இருப்பதாகவும் சவுஜன்யாவின் தந்தை குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர்.

இந்நிலையில், சவுஜன்யா தற்கொலை செய்திருப்பதாகவும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளது. இதனை போலீசாரும் உறுதி செய்திருக்கிறார்கள்.

 

More articles

Latest article