நடிகை ரியா சக்ரவர்த்தி போதை மருந்து விற்பனை செய்ததாக பகீர் தகவல்..

Must read

நடிகை ரியா சக்ரவர்த்தி போதை மருந்து விற்பனை செய்ததாக பகீர் தகவல்..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை வழக்கை சி.பி.ஐ. மும்பை போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரிக்கிறது.

இந்த வழக்கில் சுஷாந்த் காதலியான நடிகை ரியாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ரியா பம்பாய் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனப் போதைப்பொருள் தடுப்பு பிரிவின், மண்டல இயக்குநர் சமீர் வாங்கடே, உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளார்.

அந்த மனுவில்’’ ரியா, தனது சொந்த உபயோகத்துக்குப் போதை மருந்து வாங்கவில்லை. விற்பனை செய்வதற்காகப் போதை மருந்து வாங்கியுள்ளார். அதனைத் தனது வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தார்.எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை மருந்து விற்பனை செய்ததாக அவர் மீது புதிய வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

-பா.பாரதி.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article