சென்னை: குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்களை தாக்கி, இறக்கி விட்ட பாஜக பிரமுகரும், சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது.
போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இதைக் கண்ட அவ்வழியாகச் சென்ற துணை நடிகை ரஞ்சனா பேருந்தை வழிமறித்து நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரையும் தகாத வார்த்தைகளில் திட்டியதோடு மாணவர்களையும் அடித்து பஸ்சில் இருந்து இழுத்து கீழே இறக்கிவிட்டார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் நேற்று வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு.