தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தி ஜோடியாகவும், கேஎப்ஜி படத்தில் சூர்யாவுடன் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தினமும் காலை முதல் மாலை வரை படப்பிடிப்பு தளத்தில் பிஸியாக இருந்துவிட்டு கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் 2 மாதத்துக்கும் மேலாக முடங்கி உள்ளார். எவ்வளவு நாள்தான் உடற்பயிற்சி செய்து நேரத்தை ஒட்ட முடியும், சூட்டிங் ஞாபகம் ரகுலை வாட்டுகிறது.


வீட்டில் தினமும் செல்போன் கேமிராவை ஆன் செய்துவிட்டு நடித்து பழகி அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஆறுதல் அடைகிறார். தற்போது குட்டை கவுன் அணிந்த படமொன்றை வெளி யிட்டு கடைசியாக கடந்த மார்ச் மாதம் பங்கேற்ற போடோஷூட் என்று குறிப்பிட்டிருப்பதுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள துடித்துக்கொண்டிருக் கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
தமிழில் இந்தியன் 2, அயலான். இந்தியில் அட்டாக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரகுல்.