சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது தளபதி விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ஆனாலும் மாளவிகாவுக்கு பட வாய்ய்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதை ஒப்புக் கொள்ளாமல் ’மாஸ்டர்’ ரிலீசுக்காக காத்திருக்கிறார்.


இந்நிலையில் தெலுங்கு படமொன்றில் ஹீரோ ரவிதேஜாவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பட இயக்குனர் ரமேஷ் வர்மா மாளவிகாவை அணுகி கால்ஷீட் கேட்டபோது தற்போதைக்கு தெலுங்கில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று சொல்லி பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.