
நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார். இதற்கான மாநாடு இன்று மாலை மதுரையில் நடக்க இருக்கிறது.
இதற்கிடையே பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்த்து கமல் வாழ்த்து பெற்றார். பல தரப்பினரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை லலிதகுமாரியும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “வெற்றிப் படிக்கட்டில் முதல் அடி எடுத்து வைக்கும் நாயகரே” நாளை நமதே. வெற்றிப்பெற வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel