எஸ் பி பி எனக்கு கடவுள், அவர் திரும்பி வருவார்.. நடிகை குஷ்பு உருக்கமான வீடியோ..

Must read

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை பற்றி நடிகை குஷ்பு உருக்கமான வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதில் குஷ்பு கூறியிருப்பதாவது: காலையில் எழுந்தவுடன் எஸ்பிபி சார் குரல்தான் கேட்கிறேன். அவர் இல்லாமல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தினமும் கடவுளை கும்பிடுவதைப்போல் அவருடைய பாடல்களை கேட்காமல் யாராலும் இருக்கவே முடியாது. என்னால் இருக்க முடியாது. என்னைப் பொருத்த வரை அவர் தான் கடவுள் மாதிரி இருக்காரு. என் செல்போனில் எஸ்பி பி காட் என்றுதான் அவர் பெயரை பதிவு செய்திருக்கிறேன்
கடவுளுக்கு சமமாக அவரை நான் பார்க்கிறேன். என்னை மாதிரி, இந்த உலகத்தில் ஆயிரமாயிரம் கோடிக் கணக்கான ரசிகர்கள் அவர் திரும்பி வருவார்னு காத்திட்டு இருக்காங்க. நானும் காத்துக்கொண்டிருகிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காரு. மருத்துவர்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கார்னு சொல்றாங்க.


அவர் எங்களுக்காக திரும்பி வர வேண்டும், பாட்டு பாடவேண்டும், அவரை சந்தித்து நான் பேச வேண்டும். அவருடைய குரலை கேட்கணும். அவரை டெட்டி பியர் ஹக் வேண்டும். எஸ்.பி.பி. சார் உங்களுக்காக நாங்க காத்திட்டு இருக்கோம். திரும்பி வாங்க. உங்களை போன்ற ஒரு சிறந்த மனிதரை பார்க்கவே முடியாது. திரும்பி வாங்க சார்
இவ்வாறு குஷ்பு கூறி உள்ளார்.

More articles

Latest article