அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்டாவின் மனைவி நடிகை கெல்லி ப்ரெஸ்டன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கெல்லி, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்துள்ளார். இதை ஜான் ட்ரவோல்டா நேற்று (14.07.20) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CCkgCG5ptxE/
தாயை இழந்து தவிக்கும் என்னுடைய குழந்தைகளுடன் சில காலம் இருக்கப் போகிறேன். எனவே என்னிடமிருந்து உங்களுக்குத் தகவல்கள் வராது என்பதற்காக முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், வரவிருக்கும் வாரங்கள், மாதங்கள் முழுக்க நீங்கள் பொழியும் அன்பை நான் உணர்வேன்” என பதிவிட்டுள்ளார் .