பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிப்பு

Must read

சென்னை

பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இது மூன்றாம் அலை  பரவலாக இருக்கலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.  பல பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

திரையுலகில் மகேஷ்பாபு, வடிவேலு, குஷ்பு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் பெருமளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அவ்வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி ஆகி உள்ளது.  இதைக் கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.  தமக்கு லேசான அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டதாகவும்  தற்போது வீட்டில் தனிமையில்  உள்ளதாகவும் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article