முதுபெரும் கவர்ச்சி நடிகை நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

Must read

சென்னை:
த்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த, முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி  சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
a
பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ம் வருடம் ஜோதிலட்சுமி அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்ளில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.  300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். வள்ளி சீரியல்களில் அவர்  உடுத்தும்  புடவைகளுக்கு, பெண்கள் ரசிகைகளாக மாறியுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் ரத்த புற்று நோயினால் ஜோதிலட்சுமி பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்றுவந்த அவர், தொடர்களில் நடித்துவந்தார். கடந்த சில மாதங்களாக புற்று நோயின் தாக்கம் அதிகரித்ததால் சென்னை தி.நகரில் தனது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றார். இந்த நிலையில்  நேற்று இரவு காலமானார்.

More articles

Latest article