விசிக தலைவருக்கு நடிகை காயத்ரி ஆறுதல்..

Must read

விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் நடிகை காயத்ரிக்கும் அடிக்கடி அரசியல் ரீதியாக மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் கூட மோதல் போக்கு நடந்தது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் சகோதரி பானுமதி என்பவர் நேற்று கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.


சகோதரரியின் மரணம் திருமாவளவன் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது. அவருக்கு அரசியல் தலைவர்கள், டைரக்டர் பா.ரஞ்சித் பலர் ஆறுதல் தெரிவித்திருந்தனர். நடிகை காயத்ரி ரகுராம் அவருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
’திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அவர்கள் கொரோனாவால் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்திற்கு தனது இரங்கல் ’என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article