பெங்களூரு
பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம் பியுமான நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னடம் குறித்து தவராக பேச்வில்லை எனக் கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 24ம் தேதி, நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கூறினார். அவர் இந்த விஷயத்தை பேசி சில நாட்களுக்குப் பின்னர் கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கிழித்தார்கள். இப்படி இருக்கும்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர் பலரும் கருத்து தெரிவிக்க, கமல்ஹாசனோ தனது பாணியில், நான் அன்றைக்கு பேசியது அன்பினால் பேசியது. அன்பு என்றைக்குமே மன்னிப்பு கேட்காது என்று கூறி, தனது படத்தின் புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
கர்நாடகத்தை சேர்ந்த நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா
“கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டு தான் அப்படி பேசியுள்ளார் என்று நினைக்கிறேன்.
நமது மொழிகள் ஒரே வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.
அவர் பேசியதை மன்னிக்கலாம் க
மல்ஹாசன் சொன்ன, அன்பு மன்னிப்பு கேட்காது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
அன்பில் ஈ.கோ என்ற ஒன்று இருக்கவே இருக்காது
ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்க முடியும்”
என்று கூறியுள்ளார்