திருவனந்தபுரம்,

டிகை பாவனா மானபங்கபடுத்தப்பட்டது குறித்தான வழக்கில் நடிகர் திலீபிடம் காவல்துறை யினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உட்பட பல தமிழ் மற்றும் ஏராளமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாவனா.

இவர், கடந்த பிப்ரவரி 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் கடத்திச் செல்லப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை திலீப் மறுத்தார்.

இந்த நிலையில், பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காவல்துறையில் திலீப் புகார் செய்தார்., இந்த வழக்கு தொடர்பாக ஏதும் கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்த பாவனா, அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது தான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார். மேலும் காவல்துறை விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவுனர் நடிகர்கள் திலீப், நாதிர் ஷா மற்றும் முன்னாள் மேலாளர் அப்புனி ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர்.

நேற்று மதியம், 12.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை மூவரிடமும் காவல்துறையினர் போலீஸ் முகாமில் விசாரணை நடத்தினர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.