நடிகை பாவனாவை பற்றி சில காலமாகவே திருமண வதந்தி பரவி வருகின்றது. இதனால் கடுப்பான பாவனா வதந்திகளை பரப்புபவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அவர் கூறியதாவது :-
ஐயோ இது எத்தனையாவது வதந்தி என்று எனக்கே தெரியவில்லை யார் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றார்கள் என்று தெரியவில்லை இது போன்ற வதந்திகளை பரப்புவதால் இவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கின்றது? என் திருமணத்தை பற்றி நானே அறிவிக்கும் வரை யாரும் நம்ப வேண்டாம். எனக்கு திருமணம் செய்ய என் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் நீங்கள் முடிவு செய்ய வேண்டாம். இனி இது போன்ற வதந்திகளுக்கு நான் பதில் அளிக்க போவதில்லை என்று அவேசமாக அவர்களை சாடினார் பாவனா..