வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர் பா.ஜ.க. மீது கோபம்..
 
சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் , நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் புகார் ஒன்று அளித்தார்.
‘’நடிகர் எஸ்.வி.சேகர், யூ- டியூப் சேனல் ஒன்றில் தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேசியக்கொடியை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பா.ஜ.க. நிர்வாகியாக இருக்கும் எஸ்.வி. சேகர், தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தான் சார்ந்துள்ள பா.ஜ.க. தனக்கு உதவ முன் வரவில்லையே  என அதிருப்தி அடைந்துள்ளார்.
‘’கட்சி உறுப்பினருக்கு ஒரு பிரச்சினை என்றால், அவருக்கு  ஆதரவாக- கட்சி மேலிடம் துணைக்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் எனக்கு உதவத் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முன்வராதது அதிர்ச்சி அளிக்கிறது’’ என எஸ்.வி. சேகர் பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
-பா.பாரதி.