நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் இன்று மாலை பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

இன்று மாலை நடைபெறும் விழாவில் நடிகர் சங்க தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால் மற்றும் பொருளாளராக கார்த்தி ஆகியோர் பதவி ஏற்க இருக்கின்றனர்.

 

நடிகர் சங்கத்தின் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோரும் இன்று பதவி ஏற்க இருக்கிறார்கள்.