சென்னை: கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 20ந்தேதி எண்ணப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னை குட் ஷெப்பர்டு பள்ளி வளாகத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்  கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன்23ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக இரு தரப்புக்கு இடையேஏற்பட்ட மோதல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்க தமிழக அரச உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன் காரணமாக, வாக்குப்பெட்டிகள் அனைத்தும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இது தொடர்பான வழக்கில், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், பதிவான வாக்குகளை நான்கு வாரங்களில் எண்ண வேண்டும் என்ற தேர்தல் அதிகாரிக்கு பிப்ரவரி 23ந்தேதி அன்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

இதையடுத்து, வாக்குகள் எண்ணிக்கை  வருகிற 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அப்பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவரது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: மீண்டும் பஞ்சாயத்தில் குதித்த நடிகர்கள்….