சென்னை: பத்மஸ்ரீ விருதுபெற்றுள்ள நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்ய அனுமதி கோரி தமிழகஅரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிககாலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த விவேக் மரம் நடுதல் உள்பட பல்வேறு சமூக சேவைகளை செய்துள்ளார். அரசு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இதன் காரணமாக, விவேக் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என திரையுலகினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தி விதிகள் அமலில் உள்ளதால், தமிழக அரசால் ஏதும் முடிவு எடுக்க முடியாது என்பதால், அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளத.
தேர்தல் ஆணையம் உடனே அனுமதி வழங்கும் என நம்பப்படுகிறது. அதையடுத்து இன்று மாலை விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.