சென்னை: மாரடைப்பு காரணமாக  பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்றுஅதிகாலை காலமானார்.அவரது உடல் தகனம் இன்று மாலை நடைபெற உள்ளது.

மறைந்த விவேக்குக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்,  திரையுலகினர்,  பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில்,  சமூக வலைதளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

“பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விவேக்கின் நகைச்சுவை மற்றும் அறிவுப்பூர்வமான வசனங்கள் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.