நடிகர் விவேக் பொதுவாகவே எதற்கும் பயப்படாமல் தன் மனதில் என்ன தோணுதோ அதை வெளிப்படையாக கூறிவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். நேற்று காஷ்மோரா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விவேக் பொதுவாக பெரும்பாலான நடிகைகள் எப்போதும் படத்தின் புரொமோஷனுக்கு வருவதில்லை அப்படி அவர்கள் வராமல் இருப்பதற்கு ஒரு காரணம் சொல்றாங்க பாருங்க “ப்ப்ப்ப்பா” அப்படியே அசந்துட்டேன்.
அதாவது படத்தின் புரொடியூசர் அந்த நடிகையை ஒரு புரொமோஷனுக்கு அழைத்தால் அவர்கள் சொல்லுவது “சார் எனக்கு சென்டிமென்டா இருக்காது அதனால் நா வரமாட்ட சார் என்று கூறுகின்றார்களாம், சரி தான் அவர்கள் விழாவுக்கு வந்தால் படம் சரியாக ஓடாது அதுவே வரவில்லை என்றால் நல்லா ஓடும் என்ற சென்டிமெண்டாம் இவர்களுக்கு சரி தான் மேடம் அதே மாதிரி கடைசி பேமெண்டையும் சென்டிமெண்டாக வாங்காமல் இருங்களேன் தயாரிப்பாளர்கள் நல்லா இருப்பார்கள்.”
என்று அந்த விழாவுக்கு வராத நயந்தாராவை கிழித்தெடுத்தார் விவேக்…