ஓடி ஓடி புரொமோஷன் வேலைகளை செய்யும் தனுஷ்..! காரணம் என்ன?

Must read

cvl4h5busaamlfw

நடிகர் தனுஷ் தன்னுடைய முந்தைய படங்களை விட கொடி படத்துக்கு விழுந்து விழுந்து வேலை செய்ய காரணம் என்னவென்று நாம் விசாரித்தால் அதில் முக்கிய காரணம், தனுஷுக்கு தமிழில் பெயர் சொல்லும் படம் என்றால் அது ஆடுகளம் அதற்கு முன்பு சில படங்களும் உண்டு. ஆடுகளம் படம் முடிந்த பின் அவருக்கு அடுத்த கட்ட நடிகர் அந்தஸ்த்து கிடைத்தது.

அதன் பின் அவர் நடித்த‌ படங்கள் சில நஷ்டத்தை சந்தித்தன, சில படங்கள் நஷ்டத்தில் இருந்து மட்டும் தான் தப்பி சொன்றதே தவிர அவருக்கு பெயர் சொல்லும் படமாக எதுவும் அமையவில்லை. இதனாலேயோ என்னவோ இவருக்கு ரசிகர் வட்டாரமும் குறைந்து போனது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தொடரி படத்துக்கு சில திரையரங்குகளில் பேனர் கூட வைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இப்படி இருக்கும்போது கண்டிப்பாக ஒரு மாஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற‌ கட்டாயத்தில் உள்ளாராம் இவர். அதனால் தனது ரசிகர் மன்றம் செயளாலர்களை அழைத்து கொடி படத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல‌ பட்டி தொட்டி எங்கும் படம் நல்லா ஓட வேண்டும் என்பதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தானே சென்று படத்தின் புரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றார்.

இன்று தனுஷ் கோயம்பத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார் அங்கு இவர் நடித்து வெற்றி பெற்ற வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்கின்றார்.

இந்த பாணி தொடர்ந்தால் நல்லது..

More articles

Latest article