சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில், இன்று வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், திரைபிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

[youtube-feed feed=1]