மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். நடிகருக்கு வயது 34.

Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். M.S. Dhoni: The Untold Story படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது “Dil Bechara” என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரது நண்பர்கள் சிலர் வீட்டில் இருந்தனர். அவரது அறைக்கான கதவு உடைக்கப்பட்டு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

கடந்த ஆறு மாதங்களாக அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக போலீசாரின் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரின் தற்கொலைக்கு காரணம் மனச்சோர்வுதான் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர் .

சனிக்கிழமை இரவு தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் தன வீட்டிற்கு அழைத்ததாக தகவல் . ஆனால் இதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை .இரவு நேரம் கடந்து தூங்க சென்றதால் காலையில் அவரை யாரும் தேடவில்லை .

வெகு நேரம் சென்றதால் பணியாள் நண்பகலில் சுஷாந்தின் படுக்கையறை கதவைத் தட்ட முயன்றபோது, ​​அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.. அதனால் பயந்த அவர் , சுஷாந்தின் நண்பர்களை அழைத்துள்ளார்..கதவை உடைத்து பார்க்கையில் சுஷாந்த் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்துள்ளார் .

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்த செய்தி வெளியானவுடன்,பாலிவுட் உலகம் அதிர்ச்சி அடைந்த்துள்ளது .

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் பாட்னாவில் பிறந்தவர். இவரது சகோதரர் நீரஜ் குமார் பாப்லு எம்.எல்.ஏ , இவரது மைத்துனர் பீகார் சட்டமன்றத்தில் எம்.எல்.சி , இவரின் தாய் 2002 இல், இவருக்கு 16 வயது இருக்குபோது இறந்து விட்டார் . அதன்பின் இவரது மூத்த சகோதரர், இரண்டு சகோதரிகள் மற்றும் தந்தை டாக்டர் கே.கே.சிங் அவர்களால் சுஷாந்த் வளர்க்கப்பட்டார் .

பல நேர்காணல்களில், சுஷாந்த் தனது தாயை இழந்ததை தனக்கு ஒரு பெரிய அடியாக எப்போதும் பேசியிருந்தார். ஜூன் 3 ஆம் தேதி தனது சமூக வலைத்தளத்தில் தன் தாயை பற்றி பதிவிட்டிருந்தார் .

https://www.instagram.com/p/CA-S3cIDWOx/

“கண்ணீர்ப்புகைகளிலிருந்து மங்கலான கடந்த காலம் / முடிவில்லாத கனவுகள் புன்னகையின் ஒரு வளைவைச் செதுக்குகின்றன / ஒரு விரைவான வாழ்க்கை, / இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை … மா” என பதிவிட்டிருந்தார் .

சுஷாந்த் சிங் ராஜ்புத் AIEEE இல் அகில இந்திய அளவில் 7 வது இடத்தைப் பெற்றார் மற்றும் டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்தார். அவர் இயற்பியல் ஒலிம்பியாட் வென்றார். ஷியாமக் தாவரின் நடன வகுப்புகளில் சேர்ந்த அவர் பின்னர் பாரி ஜானின் நடிப்பு வகுப்புகளில் சேர்ந்து நடிகராக ஆனார்.