சென்னை: நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்க மாட்டோர், அவரது கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என முன்னாள் நீதிபதிகள் சுதந்திரம், கே.என்.பாட்ஷா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யா, “உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக” நீண்ட அறிக்கை வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.
நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், திபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையிலும், மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லா மல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இதன் காரணமாக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் கருத்து உள்நோக்கம் இல்லாதது, அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று என்று சிலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சூர்யாவின் கருத்து குறித்து கூறியுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சுதந்திரம், நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம். நீட்தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாக சூர்யாவின் அறிக்கை உள்ளது. அதிகக் கூட்டம் மிகுந்த நீதிமன்ற நடைமுறைகளை ஒரு நாள் நடக்கும் நீட்தேர்வு நடைமுறையுடன் ஒப்பிட முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
அதுபோல ஓய்வுபெற்ற நீதிபதியான கே.என்.பாட்ஷாவும், நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்க மாட்டார் என்றும், சூர்யா தொண்டு நிறுவனம், கல்வி சேவை செய்து வருவதால், அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் பெருந்தன்மையுடன் விட்டு விடலாம் என்றும் கூறியுள்ளார்.