சென்னை:
பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில், பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழங்குடி மக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. அது காலங்காலமாகத் தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.