’ஒவ்வொரு முறையும் புதிய கண்டுபிடிப்பு.. சூர்யா பாராட்டு மழையில் நனைந்த இசை அமைப்பாளர்..

Must read

டிகர் சூர்யா நடித்திருக்கும் படம் ’சூரரைப் போற்று’ இப்படத்தை ’இறுதிச்சுற்று’ பட இயக்கு னர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கி றார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக் கிறார்.
சூர்யா பிறந்த தினத்தன்று ’சூரரைப்போற்று’ படத்திலிருந்து ’காட்டு பயலே..’ என்ற பாடல் வெளியானது. ஜிவி பிரகாஅஷ் இசையில் சினேகன் எழுத்திய இப்பாடல் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்திய அளவில் 100 பாடல்களில் 29வது இடத்தை பிடித்திருக்கிறது.


இதுகுறித்து இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நடிகர் சூர்யாவுக்கு மெசேஜில் தெரிவித்திருந்தார். அதைக்கண்டு உற்சாகம் அடைந்த சூர்யா ’ஒவ்வொரு முறையும் ஒரு புது கண்டுபிடிப்பை நீங்கள் செய்வது என்னை மிகவும் கவர்ந்திருக் கிறது. இதை செய்துகாட்டி ’காட்டு பயலே’ பாடல் மூலம் ’சூரரைப்போற்று’ படத்தை சிறப்பாக்கிய தற்கு நன்றி’ என ஜிவி பிரகாஷுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் சூர்யா.
சூர்யாவின் பாராட்டை கண்ட ரசிகர்கள், ’தகுதியானவர்களை எங்களது தலைவர் பாராட்டத் தவறுவதில்லை’ என மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருப்பதுடன் அடுத்து நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தில் ஜல்லிக்கட்டு பாடல் இருந்தால் ’தலைவா நீ பாடு..’ என சூர்யாவிடம் தெரிவித் திருக்கின்றனர்.

More articles

Latest article