நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நட்சத்திர ஜோடி குடும்பத்துடன் மும்பைக்கு ஜாகையை மாற்றியதாகக் கூறப்படும் நிலையில் கோல்ஹாபூரில் உள்ள மகாலட்சுமி கோயில் மற்றும் அதன் அருகில் உள்ள காமக்கியா மந்திர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் சூர்யா – ஜோதிகா இருவரும் கோயிலுக்கு சென்றது பரபரப்பாக பேசப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel